Project 86

கணவனையிழந்து நன்கு பிள்ளைகளுடன் வசித்து வரும் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக வியாபார நிலையமொன்று அமைத்துக் கொடுக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. 

கலாமதி குடும்பமானது புதுக்குடியிருப்பு பகுதியில் கணவனையிழந்த நிலையில் நன்கு பிள்ளைகளுடன் வறுமையில் வசித்து வருகின்றது. இக் குடும்பமானது ஓலைக் குடிசையொன்றில் மிக வறுமையில் வசித்து வருகின்றது. மூன்று பிள்ளைகள் கல்விகற்கும் நிலையில் கூலி வேலைக்கு சென்றே கிடைக்கின்ற சிறிய தொகையினைக் கொண்டே பிள்ளைகளின் கல்விச் செலவு மற்றும் குடும்பத் செலவு அனைத்தையும் பார்க்கவேண்டிய நிலைக்கு இவர் தள்ளப்பட்டுள்ளார். 

எனவே இவர்களது இருப்பிடம், வாழ்வாதாரம் என்பவற்றை கருத்திலெடுத்த நிறுவனமானது  இவர்களுக்கான வாழ்வாதாரமாகவும் இருப்பிட தேவையினை பூர்த்தி செய்யவதற்குரிய வகையிலும் ரூபா 410 000 இற்கு பெறுமதியான வியாபார நிலையமொன்றை அமைத்துக் கொடுத்ததோடு அதற்குரிய பொருட்களையும் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இதற்குரிய நிதியாக ரூபா 100000 ரூபாவினை சுவிஸ் நாட்டிலிருந்து நேரடியாக உதவிய நிலையில் மிகுதி 410000 ரூபாவினை Bright Future International நிறுவனமானது வழங்கியிருந்தது. இதில் குறிப்பாக இவரது வியாபார நிலையத்திற்குரிய நிதியினை பிரித்தானியாவிலிருந்து 146 498 ரூபாவினை வழங்கிய திரு ஜனா அவர்களுக்கு நிறுவனமானது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

Contact

Bright Future International

5 Calverton Place

Greenford

UB6 7FP

United Kingdom

Phone : +44 203 689 70 43

Phone : +44 774 717 81 82

Email : admin@brightfutureinternational.co.uk

Facebook

Donate us

Bright Future International

Sortcode: 20-92-63

Account number: 33246124