இரண்டு பிள்ளைகளை நோயினால் பறிகொடுத்த தாய் மூன்றாவது பிள்ளையை காப்பாற்ற புலம்பெயர் மக்களிடம்  கோரிக்கை 

 

திருகோணமலை தம்பலகாமத்தில் ஏற்கனவே தனது இரண்டு பிள்ளைகளையும் நோய் எதிர்ப்பு சக்தியின்மை (Hyper IGM Syndrome) காரணமாக பறிகொடுத்துள்ள  தாய் தனது  8 வயது மகனை நோயின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக புலம்பெயர் உறவுகளிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். 

சந்திரசேகரம் மதிவதனியின்  குடும்பம் திருகோணமலை பகுதியில் வசித்து வருகின்றது. இவரது நான்கு பிள்ளைகளில் முதல் இரண்டு பெண் பிள்ளைகளும் நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக ( Hyper IGM Syndrome) உரிய சிகிற்சை இல்லாமல் உயிரிழந்துவிட்டன.  தற்போது, அவரது எட்டு வயது நிரம்பிய மகனும் இதே நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு இலங்கையில்  சிகிற்சை அளிக்கும் வசதி இல்லை என்றும் இதனால்  இந்தியாவில் காலதாமதம் செய்யாமல் சத்திர சிகிச்சை செய்யவேண்டுமெனவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிற்சைக்கு ஆகக்குறைந்தது ரூபா 50 இலட்சம் தேவையெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 

மதிவதனியின் குடும்பம் கூலி வேலைக்கு சென்றே அன்றாடம் உணவுத் தேவையினை பூர்த்தி செய்கின்ற நிலையில் தனது பிள்ளையின் உயிரைக் காப்பாற்றுவதற்கு 50 இலட்சம் ரூபாவினை திரட்டுவதற்கு இயலாத நிலையில் பெற்றோர் கலங்கி நிற்கின்றனர்.  தனது மகனை காப்பாற்றுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தங்களால் முடிந்தளவு உதவி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சிறுவனின் உயிரை காப்பாற்றுவதற்கு உங்களால் முடிந்தளவு நிதி உதவியினை மதிவதினியின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்பிவைக்கலாம். சிறுவனின் உயிர் பெரும் ஆபத்தில் இருப்பதால், உதவி செய்ய விரும்புபவர்கள் இயன்றளவு விரைவாக தமது உதவிகளை செய்யுமாறு வேண்டப்படுகின்றார்கள். 

இச்சிறுவனின் உயிர்காப்பதற்காக இதுவரை உதவியவர்கள் விபரம்.

1) திரு ஜெனா அவர்கள் (பிரித்தானியா ரூபா 110000,

2 ) தனது 50 பிறந்தநாளை முன்னிட்டு திரு. சுரேஸ் நிக்சன் அவர்கள் ரூபா 100000 

3) திரு கந்தசாமி நிரஞ்சன் ரூபா 150000 (பிரித்தானியா)

4) திரு சசிவன் கந்தசாமி குடும்பத்தினர்  ரூபா 130000 .  (பிரித்தானியா)

5) திருமதி ஜர்லின்ஸ் அன்ரனி குடும்பத்தினர் ரூபா 50000 (பிரித்தானியா) வழங்கியுள்ளனர்

6) அமெரிக்காவில் இருந்து திரு பாலா அவர்களும் அவர்களது நண்பர்களான திரு கரன் செல்லையா, திரு சிறீனிவாசன் ஆறுமுகம், திரு றூபன் ஆகியோர்களுமாக ரூபா 150 290 ரூபாவினை நேரடியாகவும் வழங்கி உதவியுள்ளனர்.

கிடைக்கப்பெறுகின்ற உதவிகளின்விபரங்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.

நன்றி

 

 Bright Future International நிறுவனத்திற்கூடாக உதவுவதற்கு. 

Bright Future International

Sc-209263 

Ac 33246124

Barclays

Please use the reference: (your name)

…….

 நேரடியாக உதவுவதற்கும் தொடர்புகளுக்கும்.

Santhirasekaram Mathivathani  முகவரி: பாரதிபுரம்,தம்பலகமம்,திருகோணமலை:-

Account number:- 090-2-002-1-0046241 people's bank 

வங்கி கிளை- கந்தளாய்

உதவிசெய்ய விரும்புபவர்கள் பிரித்தானியாவில் உள்ள நன்கொடை அமைப்பான Bright Future International உடன்  07747178182 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது 0044 7747178164 என்ற what sup இலக்கத்துடன் அல்லது மதிவதனியுடன் 0094764149747 என்ற இலக்கத்துடன் நேரடியாக தொடர்புகொள்ளலாம். 

 

 

 

Contact

Bright Future International

5 Calverton Place

Greenford

UB6 7FP

United Kingdom

Phone : +44 203 689 70 43

Phone : +44 774 717 81 82

Email : admin@brightfutureinternational.co.uk

Facebook

Donate us

Bright Future International

Sortcode: 20-92-63

Account number: 33246124