Project

Bright Future International (U.K) நிறுவனத்தினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

மட்டக்களப்பு, கதிர்வெளி, வெருகல் பிரதேச மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தினை ரூபா 45 00 000 செலவில் 31.03.2023 இன்று காலை 11.30 மணிக்கு ஆரம்பித்து வைத்ததோடு, இக் கிராம மக்களுக்கு ரூபா 20000 பெறுமதியான உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

கதிர்வெளி, வெருகல் கிராமமானது மிக வறிய மக்களை கொண்ட கிராமங்களில் ஒன்றாகும். இக் கிராமத்தில் வாழுகின்ற மக்கள் நிரந்தர தொழில் ஏதுமின்மையால் தேன் எடுத்தல், வேட்டையாடுதல், குட்டைகள் மற்றும் வயல்களில் மீன்பிடித்தல், கல்லுடைத்தல், காடுகளுக்குள் சென்று காட்டுப் பழங்களை பிடுங்கி விற்றல் போன்ற தொழில்களை தமது வாழ்வாதாரத்திற்காக மேற்கொண்டு வருகின்றனர். பல வேளைகளில் காட்டுப்பழங்கள் மற்றும் குளங்களில் கிடைக்கின்ற தாமரைக் கிழங்குகள் போன்றவையே இவர்களது உணவாக காணப்படுகின்றது.

இவர்களது அத்தியாவசிய தேவையாகிய குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்வதற்கு 4 மைல்களுக்கு நடந்து சென்று ஆற்று நீரினை பெற்று பயன்படுத்துகின்றனர். மழை காலங்களிலும் அதிக வெப்ப காலங்களிலும் கர்பிணித் தாய்மர், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுவதோடு சுத்தமற்ற நீரினை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

இக் கிராம மக்களது தேவையினை அறிந்து வெருகல் ஆற்றில் இருந்து நீரினை பெற்று, சுத்திகரிப்பு செய்து அவற்றினை குழாய் மூலம் இக் கிராமத்திற்கு விநியோகிப்பதற்கான செயற் திட்டத்தினை Bright Future International (U.K) நிறுவனம் 26.09.2021 அன்று தொடங்கியிருந்தது. 

இக் குடிநீர் வழங்கும் திட்ட செயற்பாடுகள் பூர்த்தியான நிலையில் இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இத் திறப்பு விழாவிற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராம மக்கள், நலன் விரும்பிகள் பலர் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இத் திட்டத்தினை சிறப்புற முன்னெடுப்பதற்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நிறுவனமானது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது. இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு கிராம மக்களின் தேவையினை கருத்திலெடுத்து அதற்கான நிலத்தினை 50இற்கு 50 அடி நிலத்தினை அன்பளிப்பாக வழங்கிய திரு திருமதி நாகராசா குடும்பத்திற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய அனுமதியினை வழங்கிய கிராம சேவகர்கள், பிரதேச சபை, காணி அளவையாளர், மின்சாரசபை ஊழியர்கள் அனைவர்க்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

இத் திட்டத்தினை இலகுவாக முன்னெடுப்பதற்கு இக் கிராம மக்கள் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தார்கள். அன்றாடம் உணவுத் தேவையினையே பூர்த்திசெய்ய கஸ்ரப்படுகின்ற நிலையிலும் கூட நீர்தாங்கி அமைப்பதற்குரிய கட்டட வேலைகளிலும், நீர் குழாய்களை பொருத்துகின்ற பொழுது அதற்குரிய நில அகழ்விலும் தங்களையும் பங்காளர்களாக இணைத்து, கடின வேலைகளை செய்த இக் கிராம உறவுகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

இக் கிராமத்தின் நிலையினை தெளிவாக தெரியப்படுத்தி எந்தவொரு சுய இலாபமில்லாது பொது மக்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கும,; இம்மக்களுக்கு குடிநீர் கிடைப்பதற்கு காரணமாக இருந்த  சிறந்த சமூக சேவையாளராகிய செல்வி செல்வராணி அவர்களுக்கு Bright Future International ( Registered Charity 1183021 U.K) நன்றியினை கூற நிறுவனம் கடமைப்பட்டுள்து.

அத்துடன் பல்வேறு வழிகளில் உதவிய அனைத்து நல்லுள்ளங்களிற்கும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த ஒளிப்பட கலைஞைர்கள், செய்தியாளர்கள், ஆதரவாளர்கள் அனைவர்க்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இக் குடிநீர் திட்டத்திற்குரிய நீர்தாங்கி அமைத்தல், நீர் விநியோக குழாய் பொருத்துதல் போன்றவற்றை சிறப்பாக அமைத்துத் தந்த கட்டிட  தொழிலாளர்கள் அனைவர்க்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அனைத்திற்கும் மேலாக இக் கிராம மக்களின் குடிநீர் தேவையினை எடுத்துக் கூறியவுடன் அதற்கான தன்னாலான ஒரு பகுதி நிதியாக ரூபா 14 50 000 ( பதின்நான்கு இலட்ச்சத்து ஐம்பதாயிரம்) வழங்கிய திரு மகாராஜா மகாமேனன் ( வசந்தன் பிரித்தானியா), ரூபா 200 000 இரண்டு இலட்சம் வழங்கிய திரு ஜெகன் (பிரித்தானியா), ரூபா 12000 வழங்கிய திரு நடேசன் மயில்வாகனம் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வாறாக கிடைக்கப்பெற்ற 16 62 000  (பதினாறு இலட்ச்சத்து அறுபத்திரெண்டு ஆயிரம்) தவிர ஏனைய நிதியினை நிறுவனமானது வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வறிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு வழிகளில் உதவுகின்ற வியாபார நிலைய உரிமையாளர்கள், ஆதரவாளர்கள் நலன்விரும்பிகள்,குறிப்பாக மாதாந்த கொடுப்பனவு முறைமூலம் நிதி வழங்குகின்ற அனைவர்க்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Bright Future International ( Registered Charity 1183021 U.K) நிறுவனமானது இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான வாழ்வாதாங்கள், கல்வித்தேவை, வலுவிழந்தோருக்கான உதவிகள், பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், அவசரகால உணவுத் தேவைகளை வழங்குதல், குடிநீர்த்தேவையினை பூர்திசெய்தல் போன்ற வழிகளில் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Contact

Bright Future International

5 Calverton Place

Greenford

UB6 7FP

United Kingdom

Phone : +44 203 689 70 43

Phone : +44 774 717 81 82

Email : admin@brightfutureinternational.co.uk

Facebook

Donate us

Bright Future International

Sortcode: 20-92-63

Account number: 33246124