project

உன்னிச்சை குளம் பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான உணவு வழங்கி வைக்கப்படுகின்றது.

உன்னிச்சைகுளம் மட்டக்களப்பு பகுதியில் Bright Future International நிறுவனத்தினால் நடத்தப்படுகின்ற இலவச பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான உணவு வழங்கி வைக்கப்பட்டது.  இக் கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் மிக வறியவர்களாகவும் மாணவர்கள் கல்வியறிவு குறைந்தநிலையிலும், போசாக்கு குறைந்த நிலையிலும் காணப்படுகின்றனர். இந்நிலையில் Bright Future International நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்டு இவர்களுக்கான கணிதம், ஆங்கிலம், தமிழ், சைவநெறி ஆகிய பாடங்களை கடந்த இரு வருடங்களாக கற்பித்து வருகின்றது. இம்மாணவர்கள் நீண்ட தொலைவிலிருந்து கல்விகற்க வருவதால் பல மாணவர்கள் சுய  நினைவிலந்து வீழ்ந்தமையினால் இவர்களுக்கான உணவு வழங்கத் தீர்மாணிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இம் மாணவர்களுக்குரிய தொடர்ச்சியான உணவு வழங்குவதை திரு கந்தன் அவர்கள் வழங்குவதற்கு முன்வந்துள்ளார்  இதற்கான நிதியாக ரூபா 15000 மாதாந்தம் வழங்க முன்வந்தமைக்கு Bright Future International நிறுவனமானது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

 

Contact

Bright Future International

5 Calverton Place

Greenford

UB6 7FP

United Kingdom

Phone : +44 203 689 70 43

Phone : +44 774 717 81 82

Email : admin@brightfutureinternational.co.uk

Facebook

Donate us

Bright Future International

Sortcode: 20-92-63

Account number: 33246124