Bright Future International இன் நோக்கங்கள்:

பின்வருவனவற்றை வழங்குவதன் மூலம் குறிப்பாக இலங்கையில் ஆனால் இலங்கையில் மட்டும்  பிரத்தியேகமாக அன்றி  உலகம் முழுவதிலும் வறுமையை தடுப்பது அல்லது இல்லாமல் செய்வது:

1. நன்கொடைகள், பொருட்கள் மற்றும் சேவைகளை தேவையில் இருக்கும் தனி நபர்களுக்கும்/ அல்லது தொண்டு நிறுவனங்களுக்கும்/ ஏனைய அமைப்புக்களுக்கும் வறுமையை தடுப்பதற்கு அல்லது இல்லாமல் செய்வதற்காக வழங்குதல்.
2. தேவையில் உள்ள குடும்பங்களுக்கு நிதி உதவியை வழங்குதல்
3. தனிநபர்கள் நிலையான வருமானத்தை ஈட்டுவதற்கும் தன்னிறைவு பெறுவதற்கும் பொருட்டு  தேவையான எல்லா ஆதரவையும் வழங்குதல்.

வளர்ச்சிப் பாதையில்.......

இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கோர யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டு வாழ்வாதார உதவிகள் எதுவும் இன்றி இன்னல்கள் பலவற்றுக்கு முகம் கொடுத்து வந்த மக்களுக்கு கடந்த 5 வருடங்களாக பல்வேறுபட்ட உதவிகளை பிரித்தானியாவில் இருந்து செய்துவந்த சேவை மனப்பான்மை கொண்ட சிலரது முயற்சியே இன்று Bright Future International என்ற பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாக 17.04.2019 அன்று முதல் பரிணமித்துள்ளது.

எமது முயற்சிகள் நிறுவனமயமாக்கப்பட்டு புதிய பரிணாமம் கண்டிருப்பது எமக்கு ஒருபுறம் உவகையையும் மறுபுறம்  ஊக்கத்தையும் அளித்திருக்கிறது. Bright Future International  என்ற இந்த தொண்டு நிறுவனம் தன்னால் முடிந்தளவுக்கு வறுமையிலும் துன்பத்திலும் வாழும் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கு உறுதி பூண்டுள்ளது.

நாம் கடந்த 5 வருடங்களில் மேற்கொண்ட பணிகள் பற்றிய ஒரு மேலோட்டமான பார்வை  

புலோப்பளை பாடசாலை மாணவர்களினதும் அதிபர் ஆசிரியர்களினதும் வேண்டுகோளுக்கிணங்க  அப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை கருத்தில் கொண்டு இலவசமாக கணித, விஞ்ஞான, ஆங்கில மற்றும் தமிழ் வகுப்புக்களை 2013 ஆம் ஆண்டு முதல் நடத்துவதற்கு நிதி ரீதியாக ஆதரவு வழங்கி வருகிறோம்.

யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட புலோப்பளை பகுதி மாணவர்களின் கல்வி மற்றும் கணனி அறிவை மேம்படுத்தும் வகையில் தற்போது கற்றல் நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான செயற்படுகளை மேற்கொண்டு வருகிறோம்.

அல்லிப்பளை பாடசாலை மாணவர்களுக்கான ஊக்குவிப்பு விழாவுக்கு 2015 ஆம் ஆண்டு நிதி அனுசரணையை வழங்கினோம்.  

யுத்தத்தினால்  பாதிக்கப்பட்டு விழுப்புண் அடைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட ராகவன் என்பவருக்கு தண்ணீர் தாங்கி  அமைப்பதற்குரிய நிதி உதவியினை 1207ஆம் ஆண்டு வழங்கினோம்.

யுத்தத்தின்போது  விழுப்புண் அடைந்து இரண்டு கால்களையும் இழந்து புதுக் குடியிருப்பில் வசித்துவரும் ஜோன் கெனடி என்பவருக்கு ஆம் 2018 ஆண்டு புதிய மூன்று சக்கர வாகனம் ஒன்றை வாங்குவதற்கான நிதி உதவியினை நாம் செய்தோம்.

போரில் தனது கால்களை இழந்து கிளாலியில் வசித்துவரும் அன்டன் ரெஜினோல்ட் என்பவருக்கு 2018 ஆம் ஆண்டு  புதிய மின் பிறப்பாக்கி இயந்திரத்திற்கான நிதி உதவியை வழங்கினோம்.

கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி பகுதியினைச் சேர்ந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வலுவிழந்தோர் குடும்பங்களை இனங்கண்டு பச்சிலைப்பள்ளி வலுவிழந்தோர் சங்கத்தின் ஊடாக உலர் உணவுப் பொதிகளை 2019 ஆம் ஆண்டு வழங்கினோம்.

இவ்வாறாக பல்வேறு  உதவி பணிகளை நாம்  செய்துள்ளோம். மற்றும் பல்வேறுபட்ட பணிகளிலும் நாம் தற்போது ஈடுபட்டுவருகின்றோம்.

எமக்கு தொடர்சியாக பல்வேறு வழிகளிலும்  உதவிகளை வழங்கி வருகின்ற அன்பு உள்ளங்களின் ஊக்கத்தினாலும், நிதி அனுசரணையினாலுமே பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் எமது மனித நேய செயற்பாடுகளை எம்மால் முன்னெடுக்க முடிகின்றது.
 
எமது அமைப்பிற்கூடாக உதவிகளை வழங்கி வருகின்ற அனைத்து உள்ளங்களையும் இந்த சந்தர்ப்பதில் அன்புடன் நினைவு கூர்ந்து நன்றி கூறுவதுடன் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவையும் உதவிகளையும் நாடிநிற்கின்றோம்.

வலுவிழந்தோருக்கான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்யும் வகையில் அவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை செய்துகொடுப்பதற்கும் நாம் கூடுதல் அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றோம்.  

உதவி கோருபவர்கள் தொடர்பில் எமக்கு கிடைக்கும் தகவல்களை இயன்றளவு அவற்றின் உண்மை தன்மைகளை உறுதிப்படுத்தி உதவிகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை நாம் உறுதிப்படுத்துவதில் கவனமாக இருக்கிறோம். நன்கொடை வழங்குபவர்கள் பயனாளிகள் பற்றிய விபரங்களை கோரும்பட்சத்தில் அவர்களின் அனுமதியுடன்  பாதுகாப்பான முறையில் அவர்களுடன் நாம் அவற்றை பகிர்ந்துகொள்வோம். நாம் செய்யும் பணிகள் தொடர்பான தகவல்கள் விபரங்களை எம்மிடம் இருந்து நேரடியாகவோ அலல்து தொலைபேசி, மின்னஞ்சல், இணையத் தளம் ஆகியவற்றினூக  எவரும் பெற்றுக்கொள்ளலாம்.

நன்றி

தொண்டர்கள், நிர்வாக உறுப்பினர்கள், அறங்காவலர்கள்

Contact

Bright Future International

5 Calverton Place

Greenford

UB6 7FP

United Kingdom

Phone : +44 203 689 70 43

Phone : +44 774 717 81 82

Email : admin@brightfutureinternational.co.uk

Facebook

Donate us

Bright Future International

Sortcode: 20-92-63

Account number: 33246124